×

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ்குமார் நியமனம்

ராசிபுரம், பிப்.4: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர் ராஜேஷ்குமார். மாவட்டங்களை பிரித்த போது திமுகவின் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார். கட்சி அறிவித்த பாசறைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளின் பயிற்சி பட்டறை கூட்டம், மாநில அளவிலான அண்ணா பிறந்த நாள் போட்டிகளை நடத்தியது, இளைஞரணிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு கட்சி பணிகளை பாராட்டி, தற்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ்குமாரை நியமனம் செய்து, தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Rajeshkumar ,Trustee ,Namakkal East DMK ,
× RELATED மரக்கன்று நடும் விழா