×

தரக்குறைவாக பேசிய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போஸ்டர்

பெரம்பூர்: தரக்குறைவாக பேசிய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புளியந்தோப்பு பகுதியில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலா.  இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இவர், தனது குடும்ப பிரச்னை காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு கவிதா என்ற பெண் போலீஸ், கலாவை  தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  மறுநாள் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரேணுகாதேவி மற்றும் சில நிர்வாகிகள் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அணுராதாவிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் அனுராதா அவர்களிடம் தரக்குறைவாக பேசி செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் புகார்தாரர்கள் எழும்பூரில் உள்ள மகளிர் உதவி ஆணையர் அலுவலகம் சென்று அங்கு புகார் கொடுத்துள்ளனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் நேற்று புளியந்தோப்பு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அணுராதா மற்றும் பெண் போலீஸ் கவிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு புளியந்தோப்பு சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

Tags : inspector ,
× RELATED ஆற்றில் மணல் திருடியவர் கைது