×

திருப்புத்தூர் கல்லூரியில் நூலக விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்புத்தூர், ஜன.31: திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அரசு, பொது நூலகமும் இணைந்து கல்லூரி மாணவர்களிடையே நூலகம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்நேசிப்போம் வாசிப்பை என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அரசு பொது நூலகத்தை சார்ந்த நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன், வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன், பூஜிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேராசிரியர் அறவள்ளுவன், கல்லூரி நூலகர் சாந்தி, டாக்டர். சந்திரசூடன், பேராசிரியர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Library Awareness Seminar ,Tirupputhur College ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா