×

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் பாலாலயம்

சோழவந்தான், ஜன. 31: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக நேற்று பாலாலயம் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் உள்ளிட்டவைகளுக்கு கடந்த மாதம் பாலாலயம் நடைபெற்று அதற்குரிய திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஜெனகை மாரியம்மன், ரேணுகாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், நந்தி உள்ளிட்ட விக்கிரகங்கள், பலி பீடம், கொடி மரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடைபெற்றது. இதற்காக பரமேஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
இதில் பதஞ்சலி சுப்பிரமணியன், முருகேசன், ராமுஅம்பலம் உள்ளிட்ட திருப்பணிக் குழுவினர், அறநிலையத்துறை துணை ஆணையர் விஜயன், செயல் அலுவலர் சுசீலா ராணி, தக்கார் மாரியப்பன், கணக்கர் பூபதி, அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் கவிதா, வசந்த், பெருமாள், முருகன், சுபாஷினி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Cholavandan Jenagai Mariamman Temple Palalam ,
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி