×

பண்பொழி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

செங்கோட்டை, ஜன. 31: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச  திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.பண்பொழி கோயிலில் இருந்து பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலுக்கு முருகனை அழைத்து வந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா கொடியேற்றம், நேற்று காலை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரங்களுடன் முருகனை திருமலைக்கோயிலில் இருந்து பண்பொழிக்கு அனுப்பும் பிரிவு உபசார விழா நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மேல் பண்பொழி கீழரத வீதியில் அன்ன கொடியேற்றப்பட்டது. 5ம் நாள் சட்ட தேர் நிகழ்ச்சி, 7ம் நாளன்று முருகர் - சண்முகர் எதிர்சேவை காட்சி, 9ம் நாளன்று தேர் திருவிழா, 10ம் நாளில் தைப்பூச திருவிழா, 11ம் நாளான வருகிற 9ம் தேதி தீபாராதனை உபசாரத்துடன் முருகர் திருமலைக்கோயிலுக்கு திரும்புகிறார் .விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் அருணாசலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம் செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பண்பொழி பேரூராட்சி முன்னாள்  தலைவர் மங்களவிநாயகம், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் கணபதி வேலுசாமி, நாட்டாமை காளிமுத்து, வடகரை ராமர், முருகையா, முருகன், மூர்த்தி காளிராஜ், ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...