×

முத்தையாபுரம் கீதா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

தூத்துக்குடி, ஜன.31: முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் ஆக்ஸிலியாகிறிஸ்டோபெல் ஆண்டறிக்கை வாசித்தார். கடந்தாண்டு 10வது மற்றும் 12வது வகுப்பில்  அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கும், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் பரிசுகள் வழங்கி பேசினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின்  கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  நிறைவாக பள்ளி தாளாளரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதா
ஜீவன் நன்றி கூறினார்.

Tags : Muttiyapuram Geetha Matric School Anniversary ,
× RELATED போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்கு