×

கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, ஜன. 31: பட்டுக்கோட்டை கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் மகளிர் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி சீனியர் முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து நீரின் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர் சேமித்தல் ஆகிய நீர் மேலாண்மை கருத்துகள் குறித்து உரையாற்றினார். இதையடுத்து குடியரசு தினவிழாவில் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. பின்னர் மாணவியர்களின் அணிவகுப்பு நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான நாச்சியம்மாள் வரவேற்றார். விஜயலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பத்மபிரியா தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Republic Day Celebration ,Karambayam Meenakshi Chandrasekaran College ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு