×

காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான அறுவடை இயந்திரங்கள் உள்ளது

நாகை, ஜன.31: காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான அறுவடை இயந்திரங்கள் உள்ளது. அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஓ.எஸ்மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை அருகே வடக்கு பொய்கைநல்லூர் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்பு விழா மற்றும் நாகையில் மண்பரிசோதனை நிலையத்திற்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை ஆகியவை நடந்தது. விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்தார். விழாவில் தமிழக அமைச்சர் ஓஎஸ்மணியன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ கிளை நிலையம் மற்றும் மண்பரிசோதனை நிலையத்திற்கான பூமிபூஜை விழா ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் ஓ.எஸ்மணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்ற சிறப்பை பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து விருதுகளையும் தமிழகம் பெற்றுள்ளது. இதற்கு காரணம் விவசாயிகளும், விவசாயம் சார்ந்த அதிகாரிகளும் தான்.

எவ்வளவோ இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் தாண்டி நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு வேளாண் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அறுபடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடைக்கு போதுமான அறுவடை இயந்திரங்கள் உள்ளது. அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு காரணம் பருவநிலை மாற்றம். முன்பு எல்லாம் அதிகாலையிலே அறுவடை தொடங்கி இரவு வரை நீடிக்கும். ஆனால் தற்பொழுது அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதே போல் ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது நிலத்திற்கு ஏற்ப அறுவடை இயந்திரங்களை கேட்கின்றனர். காலம் தாழ்த்தி அறுவடை செய்தால் நெல் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.

Tags : districts ,Cauvery Delta ,
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...