காளையபட்டி ஊராட்சியில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

கடவூர், ஜன. 31: காளையபட்டி ஊராட்சி துணை தலைவர் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. காளையபட்டி ஊராட்சியில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. இதில் தலைவர் பதவிக்கு ஆரோக்கியமேரி மற்றும் நிர்மலா போட்டியிட்டனர். இதில் நிர்மலாவின் வேட்பு மனுவில் குளறுபடி இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் போட்டியின்றி ஆரோக்கியமேரி தேர்வு செய்யப்பட்டார். இதனை கண்டித்து 1, 2, 5, 6 ஆகிய வார்டுகளில் யாரும் போட்டியிடவில்லை. இதனால் தேர்தல் இந்த வார்டுகளில் நடக்கவில்லை. 3வது வார்டில் மைக்கேல் பிரகாசம், 4வது வார்டில் அழகர்சாமி ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. துணை தலைவர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டதால் முன்மொழிய வார்டு உறுப்பினர்கள் இல்லை. மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க இருவரும் சம்மதிக்கவில்லை. இதனால் இந்த ஊராட்சியில் துணை பதவிக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் அறிவித்தனர்.

Related Stories: