×

ஆதனூர் ஊராட்சி சென்னம்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கடவூர், ஜன. 31: ஆதனூர் ஊராட்சி சென்னம்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னம்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடந்த இந்த மருத்துவ முகாமிற்கு ஊராட்சி தலைவர் பூமா ராஜேந்திரன் தலைமை வகித்தார். முகாமில் டாக்டர் மணிமொழி பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தார். இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மருத்துவர் தேன்மொழி, அங்கன்வாடி பணியாளர் மணிமாலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Free Medical Camp for Pregnant Women ,Adhanoor ,
× RELATED வேதாரண்யம் அடுத்த ஆதனூரில் பள்ளி...