×

சுப்ரமணியசாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சி, ஜன. 31: பொள்ளாச்சியில்  சுப்ரமணியசாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி கடைவீதியில் சுப்ரமணியசாமி கோயிலில், சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 26ம் தேதி கணபதிஹோமத்துடன் துவங்கியது.  27ம் தேதியன்று  விநாயகர் வழிபாடும், மாலையில் அக்னி சங்கரஹணமும், இரவில் முதல்கால வோள்வி  பூஜையும் நடைபெற்றது. 28ம் தேதி  ரஷபந்தனம்,  கும்பஸ்தாபனம் நடந்தது. இதையடுத்து இரவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம்,  காலையில் கோ பூஜையும், யாக பூஜையும், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

நேற்று அதிகாலையில்  பரிவார யாக சாலை பூஜையும், அதன்பின், பரிவார கலச வழிபாடும் நடைபெற்றது. இதையடுத்து பரிவார மூத்திகளுக்கு கும்பாபிஷேகமும். காலை  அஷ்டபந்தான மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், சப்-கலெக்டர் வைத்தியநாதன், தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியையொட்டி, நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகலில் சுப்ரமணியசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்  நடந்த மாபெரும் அன்னதான நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Maha Kumbabishekha ,Subramaniyasamy temple ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா