×

காடையாம்பட்டியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா

காடையாம்பட்டி, ஜன.30: காடையாம்பட்டியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஓமலூரில் இருந்து காடையாம்பட்டியை பிரித்து தனி தாலுகாவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காடையாம்பட்டியை தனி தாலுகாவாக அறிவித்தார். புதிதாக தாலுகா அலுவலக கட்டிடம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய தீயணைப்பு நிலையத்தை நேற்று சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். காடையாம்பட்டியில் நடைபெற்ற விழாவில், வெற்றிவேல் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மாரியம்மாள் ரவி, துணைத்தலைவர் மகேஸ்வரி வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சித்தேஸ்வரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் விஜயகுமார், உதவி அலுவலர் முருகேசன், சிவக்குமார், பிடிஓ கருணாநிதி, செயல் அலுவலர் செந்தில்குமார். மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், நகர செயலாளர் கணேசன் தீவட்டிப்பட்டி பொறியாளர் விஜயன், ஆனந்தகுமார், கவுன்சிலர்கள் ரமேஷ், மணி வரதராஜன், பசுபதி, சுமதி சேட்டு, ஜோதி செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Opening Ceremony of Fire Station ,Kadayampatti ,
× RELATED காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி...