×

பிப்.23ல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாஜி அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவில் இணையும் விழா மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ தகவல்

மதுரை, ஜன. 30: மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், அவைத்தலைவர் பரந்தாமன் தலைமையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. கூறியதாவது:  ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுக வெற்றி பெற வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். பிப்.23ல் மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள மைதானத்தில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் பல்லாயிரம் பேருடன் திமுகவில் இணையும் விழா நடக்கிறது.

இதில், கலந்து கொள்ள வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம். நாளை (ஜன.31) திருச்சியில் நடக்கும் உள்ளாட்சி தலைவர் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்போம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பிப்.2 முதல் 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு, முதன்முறையாக நடக்கும் இளைஞரணி மாநாட்டை, மதுரை வடக்கு தெற்கு மாவட்டம் சார்பில் மதுரையில் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.  இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜின்னா, ஒன்றியச் செயலாளர்கள் ஏபி.ரகுபதி, சிறைச்செல்வன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலாகலாநிதி, அணி நிர்வாகிகள் நேரு. ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Murthy ,Raja Kannappan ,MLA ,Maj ,DMK ,MK Stalin ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...