×

கடும் பனிப்பொழிவால் பயிரிட முடியாமல் விவசாயிகள் திணறல்

ஊட்டி, ஜன. 30:   நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் இரண்டு மாதங்கள் வட கிழக்கு பருவமழை பெய்யும். இவ்விரு பருவ மழையும் குறித்த சமயத்தில் பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகள், அதாவது செங்குத்தான மலைகளை கூட படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்வது வழக்கம். சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், கடந்த ஆண்டு குறித்த சமயத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால், பல ஆண்டுகளாக விவசாயம் ெசய்யாத செங்குத்தா மலைகளில் கூட விவசாயிகள் மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொண்டனர்.

அதேசமயம், அனைத்து காய்கறிகளுக்கும் ேபாதுமான விலை கிடைத்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.  ஆனால், கடந்த இரு மாதங்களாக கடும் பனி பொழிவு நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளும் செடி, கொடிகள், பயிர்கள் காய்ந்து விட்டன. குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, போதிய தண்ணீர் வசதி இன்றி ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, இத்தலார், போர்த்தியாடா, அணிக்கொரை, எப்பநாடு போன்ற பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தோட்டங்களில் வளர்ந்துள்ள புற்கள் மற்றும் சிறு செடி கொடிகள் காய்ந்து போய் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு