×

விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு

கூடலூர், ஜன. 30:   விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கிய கூடலூர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தின் கூடலூர் கிளை கடந்த 2018-19ம் ஆண்டில் விபத்து இன்றி பேருந்துகளை இயக்கி சாதனை புரிந்துள்ளது. இதனைப் பாராட்டி 255 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நேற்று கிளை வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆபிரகாம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியாளர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.
 இதில் இயக்குனர் ஆபிரகாம் பேசியதாவது: கோவை மண்டலத்தில் கூடலூர், தாளவாடி, கொடுமுடி, வால்பாறை, ஒண்டிப்புதூர்1 ஆகிய ஐந்து கிளைகள் கடந்த 2018-19ம் ஆண்டில் விபத்து இன்றி பேருந்துகளை இயக்கி சாதனை புரிந்துள்ளது.

 இதில் 1,052 ஓட்டுனர், நடத்துனர்கள் பணியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக கூடலூரில் 255 பேருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படுகிறது. விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்குவது, டீசல் சிக்கனம் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்து கழகத்தின் தேவையற்ற செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கிறது. இதன்மூலம் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் உள்ளிட்ட பயன்களை வழங்க முடிகிறது. அனைத்து நிலைகளிலும் விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை கவனத்துடன் இயக்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

போக்குவரத்து பணியாளர்களுக்கு அரசு போதிய சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கி குடும்ப பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் வழங்கி வருகின்றது. எனவே ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணி புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.   இந்நிகழ்ச்சியில் முன்னதாக கிளை மேலாளர் நாகேந்திரன் வரவேற்று பேசினார். பொது மேலாளர் ஊட்டி மோகன், பொது மேலாளர் தொழில்நுட்பம் குமார், துனை மேலாளர் தொழில்நுட்பம் வீருகாந்தன், துணை மேலாளர் ஊட்டி கணேசன், கூடலூர் கிளை முன்னாள் மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிழ்ச்சியில் எல்.பி.எப் மண்டல செயலாளர் நெடுஞ்செழியன், ஏ.டி.பி மண்டல செயலாளர் பிரபாகரன், கூடலூர் கிளை தலைவர் லோகநாதன், செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் ராஜீ மற்றும் துனை நிர்வாகிகள்,     ஒட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : incident ,Transport Corporation ,
× RELATED தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில்...