×

திருவட்டார் அருகே துணிகரம் முகத்தில் மிளகாய்பொடி தூவி பெண்ணிடம் செயின் பறிப்பு

குலசேகரம், ஜன.29: திருவட்டாரை   அடுத்துள்ள மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பபாய் (59). இவர்   வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணியளவில்   பசுமாட்டில் பால் கறந்து அந்த பகுதியில் உள்ள கடையில் கொடுப்பதற்காக நடந்து   சென்றார். மூவாற்று முகம் பாலம் பகுதியில் சென்றபோது அங்கு வந்த  மர்ம நபர்கள் அவரது  முகத்தில் மிளகாய்பொடியை தூவி அவர் கழுத்தில்  அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து விட்டு வேகமாக சென்றுவிட்டனர்.  அதிகாலை நேரம்  என்பதால் அந்த பகுதியில் யாரும் இல்லை. இதனால் செயின்  பறிப்பில் ஈடுபட்டது யார் என தெரியவில்லை.  இதுகுறித்து அவர்  திருவட்டார்  போலீசாசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த மர்ம நபர்களை தேடி  வருகின்றனர்.

Tags : Thiruvattar ,
× RELATED கடையால் அரசு மாதிரி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்