×

காளையார்கோவிலில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

காளையார்கோவில், ஜன. 28: காளையார்கோவிலில் நடந்த வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நாட்டில் தேர்தல்களை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நாளைத்தான் 2011ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி காளையார்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது. வட்டாட்சியர் சேதுநம்பு தலைமை வகித்தார். பேரணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம், வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கியும் பிரசாரம் செய்தனர். பின்னர் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் தர்மராஜ், பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய இருதயராஜ், மண்டல துணை வட்டாட்சியர் இளங்கோ, வருவாய் உதவியாளர் கமலேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மெய்யப்பன், நாகேந்திரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : awareness rally ,Voter Day ,Kaliyarikovil ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி