×

நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்

காரைக்குடி, ஜன.28: காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பழனியம்மாள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்து பேசுகையில், இந்தியாவில் 2016ம் ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம், 2017ல் 1 லட்சத்து 47 ஆயிரம், 2018ல் 1 லட்சத்து 49 ஆயிரம் பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 2019ம் ஆண்டு 10,000 வாகனங்களுக்கு 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் திருத்தம் செய்யப்பட்டு சாலை விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டதால் விபத்துகள் குறைந்துள்ளது என்றார். வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் துவக்கிவைத்து பேசுகையில், சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை தடுக்கலாம். மது அருந்திவிட்டு விட்டு வாகனம் ஓட்டுதல் கூடாது என்றார். மோட்டர் வாகன ஆய்வாளர் ஆனந்த், தனிவட்டாட்சியர் தங்கமணி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் வளர்ச்சி அதிகாரி காசிவிஸ்வநாதன், அரசு வழக்கறிஞர் ராஜூ, சாலைபாதுகாப்பு படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ்மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்துறை உதவி பேராசிரியர் சங்கரதாசு நன்றி கூறினார்.

Tags : Road Safety Seminar ,Nachiappa Swamy College ,
× RELATED சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்