×

கலெக்டர் வேண்டுகோள் ஆண்டிமடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம், ஜன. 24: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இந்த பேரணி காவல் நிலையத்தில் துவங்கி கடைவீதி நான்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆண்டிமடம் பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. இதில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லக்கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழங்கினார். பேரணியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...