தேவகோட்டையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு வலை

தேவகோட்டை, ஜன. 24: தேவகோட்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க முயன்று கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை கண்டதேவி சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தாழையூர் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் முன்புறமே வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் (ஜன.22ம் தேதி) நள்ளிரவில் மர்மநபர்கள் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்று கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இருந்ததும் மர்மநபர்கள் தலைமறைவாகி விட்டனர். நேற்று காலையில் வங்கி பணியாளர்கள் வந்தபோது ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தது தெரிந்தது. இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் அளித்

தனர். அதன்பேரில் போலீசார் ஏடிஎம் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>