×

கோவை சிறை வளாகத்தில் முதல்நிலை தலைமைக்காவலர் தேர்வு: 168 பேர் பங்கேற்பு

கோவை, ஜன.23: கோவை மத்திய சிறை வளாகத்தில் முதல்நிலை தலைமைக்காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பணியாற்றும் 168 முதல்நிலை காவலர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடைபெற்றது.  தொடர்ந்து அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு முறைகள் அனைத்தும் சென்னை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், மதுரை டி.ஐ.ஜி. பழனி, திருச்சி டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், வேலூர் டி.ஐ.ஜி. ஜெயபாலன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

Tags : Headmaster ,Coimbatore Prison Campus ,Participants ,
× RELATED விழுப்புரம் அருகே அரசு பள்ளியில்...