×

மக்களின் அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்

காரைக்குடி, ஜன. 23: மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் உள்ளாட்சி தலைவர்கள், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பாஸ்கரன் பேசினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றம் துணை தலைவர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, எஸ்.புதூர் ஒன்றியங்களை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிஆர்ஓ பாண்டி வரவேற்றார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

விழாவில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் துவக்கிவைத்து பேசுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. தெருவிளக்கு, சாலை, கிராமப்புற பகுதிகளை தூய்மையாக பராமரித்தலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். பல பஞ்சாயத்துகளில் நிதிநிலை சரியில்லாமல் உள்ளது. மின்சாரம், குடிநீர் பிரச்னையை சரிசெய்யக்கூட பல பஞ்சாயத்துகளில் நிதி பற்றக்குறை உள்ளது. சமுதாயக்கூடம் உள்ளிட்ட கோரிக்கைக்கு எம்பி, எம்எல்ஏ நிதியை தான் எதிர்பார்க்கணும்’’ என்றார்.

Tags : Representatives ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...