×

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் உதவித்தொகை பெற அழைப்பு கலெக்டர் தகவல்

இளையான்குடி, ஜன. 23: சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில், ‘ தமிழக முதல்வர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ், அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ள ஏதுவாக, அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையுடன் கூடுதலாக ரூபாய் ஆயிரம் (1000) உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் தகுதியான மாற்றுத்திறனாளிகள், (1) தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று, 75 சதவீதத்திற்கு மேல் உள்ள அதிக உதவி தேவைப்படும் நபர்கள் மற்றும் மன வளர்சி குன்றிய, கை, கால் குறைபாடுடைய மாற்றுத்திறனுடைய நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். (2) மாற்றுத்திறனுடைய நபர் புகைப்படம் மற்றும் அவரது உதவியாளரின் புகைப்படம். (3) அதிக உதவி (ஆதரவு) தேவைப்படும் மாற்றுத்திறனுடையவரின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு நகல். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய மாற்றுத்திறனுடையவர்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை