×

நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

வத்தலக்குண்டு, ஜன. 23:  நிலக்கோட்டையில் ஜன.22ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் அறிவித்து இருந்தனர். அதற்குள் தாங்களாகவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒரு சிலர் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தனர். நேற்று 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. இதையடுத்து பலரும் வேகம், வேகமாக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர். இதுகுறித்து சமூகஆர்வலர் ஜோசப் கூறுகையில், ‘ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு தான் அணைப்பட்டி சாலை விசாலமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிக்காத வகையில் கண்காணிக்க வேண்டும். மேலும் சாலையில் நடுவிலுள்ள மின்கம்பங்களை ஓரமாக மாற்றியமைத்து நெடுஞ்சாலையில் உள்ளதுபோல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்’ என்றார்.

Tags : evacuation ,landfill ,
× RELATED முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து...