எட்டயபுரத்தில் பைக் பேரணிக்கு பாஜவினர் வரவேற்பு

எட்டயபுரம், ஜன.23: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக எட்டயபுரம் வந்த பைக் பேரணிக்கு பாஜவினர் வரவேற்பளித்தனர்.  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் துவங்கிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பைக் பேரணி மலயுத்த வீராங்கனை ராஜலட்சுமி மகத் தலைமையில் எட்டயபுரத்திற்கு வந்தது. எட்டயபுரம் பைபாஸ் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பொன்.பாலகணபதி, கோட்ட பொறுப்பாளர் வை.ராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், எட்டயபுரம் ஒன்றிய தலைவர் ராம்கி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். பைக் பேரணி எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவில்பட்டி சென்றடைந்தது. பேரணியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவந்தி.நாராயணன், பாலாஜி, சரவணகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை தலைவர் ஆத்திராஜ் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் வில்லிசேரி மாரிமுத்து விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் கந்தசாமி, எட்டயபுரம் நகர பாஜக பொறுப்பாளர்கள் நாகராஜன், முனியராஜ், இளம்புவனம் பாஜக பொறுப்பாளர்கள் சங்கரலிங்கம், தளவாய்சாமி, காளிராஜ், வீரப்பட்டி சவுந்தர், கன்னக்கட்டை ஜெயராம், கடலையூர் முத்துவேல்  உள்ளிட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>