×

24ம் தேதி நடக்கிறது கருப்பக்கவுண்டன்புதூரில் இருந்து தாந்தோணிமலை செல்லும் சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கரூர், ஜன. 22: எரிக்கப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. கரூர் நகராட்சி கருப்பகவுண்டன்புதூரில் இருந்து தாந்தோணிமலை செல்லும் சாலையில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. இருந்த தொட்டியும் பயனற்ற நிலையில் கிடக்கிறது. இந்நிலையில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. பல நாட்களாக அகற்றப்படாத நிலையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் புகைமண்டலம் எழுந்து அப்பகுதியில் காற்றுமாசு ஏற்பட்டது. பல இடங்களில் குப்பைகளை அகற்றாததால் மூட்டை மூட்டைகளாக குவிந்து சுகாதாரகேடு ஏற்படுகின்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் அகற்றப்படாமல் கிடக்கின்ற குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : garbage dumps ,roadside road ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன்...