×

மலேசியாவில் கொத்தடிமையாக இருந்தவர் மீட்பு கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்


சிவகங்கை, ஜன. 21:  மலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர், கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். தேவகோட்டை அருகே பெரியஉஞ்சனை கிராமத்தைச் சேர்ந்த ராமன், சிவபாக்கியம் மகன் விஸ்வநாதன் (35). இவர், மலேசியா நாட்டிற்கு கடந்த 2016ல் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். பணிக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் விசாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லாமல் கொத்தடிமையாக வேறு இடத்தில் பணி செய்ய அனுப்பியுள்ளார். மேலும், விஸ்வநாதன் தாய் சிவபாக்கியத்திடம் ஏஜெண்ட் தொடர்பு கொண்டு, அவர் பணி செய்யாமல் நிறுவனத்தில் தவறு பண்ணுவதாகவும், அதனால் நிறுவனத்தினர் பிடித்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்க ரூ.20 லட்சம் வேண்டும் எனக் கேட்டு ரூ.12 லட்சம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து விஸ்வநாதனை துன்புறுத்தியுள்ளனர். விஸ்வநாதனின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனிடம் தெரிவித்து, அவரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரினர். இது குறித்து தமிழக அரசு மூலம் மலேசிய தூதரகத்திற்கு தெரியப்படுத்தி விஸ்வநாதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகம் வந்து சேர்ந்த விஸ்வநாதன் அவரது குடும்பத்தினருடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜெயகாந்தனுக்கு நன்றி தெரிவித்தார். விஸ்வநாதனுக்கு புதிய வாகனம் வாங்கி தொழில் தொடங்க கடனுதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags : rescue collector ,Malaysia ,clown ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...