×

ஆலங்குடி அருகே விவசாயி வீட்டில் 22 பவுன் திருட்டு

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேங்கிடகுளத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன்(36). விவசாயியான இவர்,நேற்று தனது வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, பெட்டியில் வைத்திருந்த 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,home ,Alangudi ,
× RELATED தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில்...