×

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் வாபஸ்

சீர்காழி, ஜன.21: சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் அரசூர் ஆச்சாள்புரம் எடமணல் துணை மின் நிலையங்களில் இன்று (21ம் தேதி) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை புத்தூர், எருக்கூர், மாதிர வேளுர், வடரங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆனைக்காரன் சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கணாம், பட்டு ஆச்சாள்புரம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது சில நிர்வாக காரணங்களால் இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது. இதனால் அனைத்து கிராமங்களிலும் வழக்கம்போல மின் விநியோகம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Sirikazhi ,Kolitti ,
× RELATED நாகை சீர்காழி அருகே பாலியல் வன்கொடுமை...