×

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும்: திருமாவளவன் எம்.பி தகவல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறியதாவது: ஊபா சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை திரும்ப பெறவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழக முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். நீட் தேர்வு பயத்தால் மாணவி கனிமொழி, சவுந்தர்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு மன அழுத்தத்தை தந்துள்ளது. மோடி அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக மாணவர்களை காக்க மோடி அரசு முன்வர வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும்: திருமாவளவன் எம்.பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirumavavan ,Dizhagam Alliance ,Karaigudi ,Shivakanga District ,Karakkudi ,the Leader of the ,Thirumavalavan M. B ,Upa ,Vizika ,Dhagagam Alliance ,Thirumavalavan ,M. B ,
× RELATED வைரஸ் காய்ச்சல் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி