×

தேர்தல் விரோதத்தில் பெண் உட்பட 2 பேர் மீது தாக்குதல்

சிவகாசி, ஜன. 19: சிவகாசி அருகே, தேர்தல் முன்விரோதம் காரணமாக பெண் உட்பட இருவரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகாசி அருகே செவலூரை சேர்ந்தவர் முருகன் (49). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ்பெருமாள் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், முருகன் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, ரமேஷ்பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தகராறு செய்து, அவரை தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க வந்த முருகனின் உறவினர் காட்டுராணியையும் தாக்கிவிட்டு தப்பினர்.

இதில், காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில், ரமேஷ்பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிகரன், நந்தகோபால், சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை...