உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

ஊட்டி, ஜன. 19: ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் சைக்கிளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று ஊட்டி அருேகயுள்ள உல்லத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தநாடு மந்தில், விழிப்புணர்வு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்கிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தலைமை வகித்தார். தொடர்ந்து, இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டது.

மத்திய அரசின் பிட் இண்டியா திட்டம் குறித்து விழாவில், விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விழாவில், உல்லத்தி ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தோடர் பழங்குடியின மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூடலூர் : மசினகுடி ஊராட்சி வளாகத்தில் பிட் இந்தியா அமைப்பு சார்பில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி, கவுன்சிலர்கள், மசினகுடி எஸ்.ஐ. நிக்கோலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் சைக்கிள் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மசினகுடி பஜாரில் இளைஞர்களைக் கொண்டு சைக்கிள் ஓட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Bicycle awareness rally ,
× RELATED விண்ணமங்கலத்தில் சைக்கிள்தின விழிப்புணர்வு பேரணி