×

பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை, ஜன.19: கோவை பெட்ரோல் பங்க்கில் பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரத்தில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாயிபாபா காலனி எருக்கம்பெனி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் ஊழியராக பணிபுரிந்தனர். இங்கு பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில், செல்போன்  கேமராவை பொருத்தி,  உடை மாற்றும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதனை பெட்ரோல் பங்க்கில் சூபர்வைசராக பணிபுரிந்த சுபாஷ் என்பவர் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டனுக்கும், பெட்ரோல் பங்க் சூபர்வைசர் சுபாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, சுபாசிடமிருந்து மணிகண்டன் செல்போனை பறித்து, சில வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனுக்கு பார்வேர்டு செய்து கொண்டார்.இதனையடுத்து பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேசி வீடியோக்களை அழிக்க உத்தரவிட்டனர். பின்னர் சுபாசை வேலை நீக்கம் செய்தனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உடை மாற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் கோவை மீடியா என்ற ஆன்லைன் சமூக ஊடகம் நடத்திவரும் மருதாசலம்(42), இவருக்கு உடந்தையாக இருந்து, வீடியோவை பகிர்ந்த  பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டன்(35), ரகசியமாக கேமரா பொருத்தி வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் சூபர்வைசர் சுபாஷ்(32) ஆகிய 3 பேரை கடந்த 8ம் தேதி மாலை போலீசார் கைது செய்தனர்.பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சாயிபாபா காலனி போலீசார் சிறை நிர்வாகத்திடம் நேற்று மதியம் அளித்தனர். இதனையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags : men ,release ,women ,
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்