மாநில சைக்கிள் போட்டியில் திருவில்லி.மாணவர்கள் வெற்றி

திருவில்லிபுத்தூர், ஜன. 19:  தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவியருக்கான மாநில அளவிலான சைக்கிள் போட்டி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இப்போட்டி 14, 17 மற்றும் 19 வயது ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. 17வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 20 கி.மீ சைக்கிள் போட்டியில் திருவில்லிபுத்தூர் அரிமா பள்ளி மாணவர் நித்தீஷ் இரண்டாம் இடமும், 17வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 10 கி.மீ சைக்கிள் போட்டியில் இப்பள்ளி மாணவி சுபிக்ஷா முதலிடமும் பிடித்தனர். 19வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 20 கி.மீ சைக்கிள் போட்டியில் மாணவி மதுமிதா மூன்றாம் இடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநரும், முதன்மை உடற்கல்வி ஆய்வாளருமான வென்குமார், தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் முருகன், துணை முதல்வர் திவ்யநாதன், உடற்கல்வி ஆசிரியர் முரசொலி ஆகியோர் பாராட்டினர். வெற்றி மூவரும் சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் புனேயில் நடைபெற்ற தேசிய சைக்கிள் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>