பாதயாத்திரை கூட்டத்தில் டூவீலர் புகுந்தது மதுரை பக்தர் பலி சிறுமி படுகாயம் பழநியில் பரிதாபம்

பழநி, ஜன. 19: பழநியில் டூவீலர் மோதிய விபத்தில் மதுரை சேர்ந்த பாதயாத்திரை பக்தர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50), கரும்பு ஜூஸ் விற்பனையாளர். இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை வந்தார். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழநி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ராஜேந்திரன் குடும்பத்தினருடன் வரும்போது, எதிரே வந்த டூவீலர் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது.

இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்தில் முருகன் என்பவரது மகள் சுகந்திக்கா (3) படுகாயமடைந்தார். சிறுமியை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வந்து கொண்டிருப்பதால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மித வேகத்தில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pilgrimage ,accident ,Madurai Madurai ,
× RELATED தைப்பூசம் மறுபூஜை முன்னிட்டு மயில் காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை