×

உதவித்தொகை கேட்டு மூதாட்டி கலெக்டரிடம் மனு

கோவை, ஜன. 14: கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி(75). கணவர் இல்லை. இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவது மகன் பராமரிப்பில் சாவித்ரி சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.  இந்நிலையில், கடந்த மாதங்களாக 2வது மகன் வேலைக்கு செல்லாததால், சாவித்திரிக்கு பணம் அளிக்கவில்லை. இதனால், தன்னி–்டம் உள்ள நகைகளை விற்று வீட்டு வாடகை, உணவு உள்ளிட்ட செலவுகளை கவனித்து வந்துள்ளார்.  இந்நிலையில், சாவித்திரி நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்தார். நடக்க கூட முடியாமல் இருந்த அவரை பணியில் இருந்த பெண் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர், அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். இதில், முதல் மகனுக்கு ஆபரேஷன் செய்துள்ளதாகவும், இரண்டாவது மகனுக்கு வேலை இல்லாததாலும்,  தனக்கு முதியோர் உதவித்தொகை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக நவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை