×

அகழியை சுத்தப்படுத்தும் பணி தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதாக கூறி டோக்கன் வழங்க மறுத்ததால் விசைப்படகு மீனவர்கள் சாலை மறியல் முயற்சி

சேதுபாவாசத்திரம், ஜன. 14: சேதுபாவாசத்திரத்தில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதாக கூறி டோக்கன் வழங்க மறுத்ததால் விசைப்படகு மீனவர்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் மட்டும் 52 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகள் அனைத்தும் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும். மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வர். இந்நிலையில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் உள்ள படகுகளி–்ல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதாக கூறி வழக்கமாக நேற்று விசைப்படகுகளுக்கு வழங்க வேண்டிய அனுமதி டோக்கன் வழங்க மீன் வளத்துறை மறுத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இனிமேல் விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி தினம்தோறும் மீன்பிடி தொழில் செய்வதை தவிர்த்து செவ்வாய் வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் மட்டும் மீன்பிடி தொழில் செய்ய வேண்டுமென தீர்வு காணப்பட்டது. அதன்பின் 12 மணியளவில் டோக்கன் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் உள்ள விசைப்படகில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதாக கூறி சந்தேகத்தின்பேரில் மீன்வளத்துறை டோக்கன் வழங்க மறுத்துள்ளது. முறைப்படி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகளை கடலின் உள்ளே சென்று பிடிக்க வேண்டும். இல்லையேல் எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்படி செய்யாத மீன்வளத்துறையினர் சந்தேகத்தின்பேரில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் வர உள்ள நிலையில் டோக்கன் வழங்க மறுப்பது படகு உரிமையாளர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். யார் தவறு செய்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் ஒரு சிலர் தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு அனைத்து மீனவர்களும் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு டோக்கன் வழங்க மறுப்பது முறையற்ற செயலாகும். எனவே தான் சாலை மறியல் செய்ய முற்பட்டோம். ஆனால் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் பேச்சுவார்தையில் தீர்வு காணப்பட்டது என்றார்.

Tags : Fishermen ,road ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...