×

செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் பள்ளி பரிமாற்று திட்டம் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

செய்யாறு, ஜன.13: செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் நடந்த பள்ளி பரிமாற்று திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். செய்யாறு வட்டார வள மையத்திற்கு உட்பட்ட நகராட்சி பகுதியில் உள்ள பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளிக்கு தனியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவ, மாணவிர்கள் 20 பேர் வருகை புரிந்தனர். பின்னர், நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் சோலையப்பன் தலைமை தாங்கி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்,
விழாவில் அரசு பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி தங்கள் தனித்திறமைகளான ஆடல், பாடல், வில்லுபாட்டு, கராத்தே பயிற்சி மற்றும் அப்பள்ளியின் வகுப்பறைகளை உற்று நோக்கினர். இதையடுத்து, மாணவர்கள் தலைமை அஞ்சலகம், வங்கிகள் தண்டரை அணைக்கட்டு, கோயில்கள் ஆகியவற்றை களப்பயணமாக சென்று பார்வையிட்டனர்,

இதில் வட்டார வள மையத்தை சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் ப.பேபி, ஏ.ரேவதி. தி.வைரப்பிரியா, ஆசிரியர்கள் அம்பிகா, மோகனவல்லி தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், முடிவில் உதவி ஆசிரியர் கோதைநாயகி நன்றி கூறினார்.
கீழ்பென்னாத்தூர்: பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் கீழ்பென்னாத்தூர் அடுத்த கடம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த 10 தேதி வந்தனர். தலைமை ஆசிரியர் ஆதிலட்சுமி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் பாபு முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். இதில், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வம், வே.ஸ்ரீராமலு ஆகியோர் பேசினர். தொடர்ந்து மதியம் களப்பயணத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனசேகர் கலந்து கொண்டார். இதில் பள்ளி ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படச் செய்தனர். முடிவில் இடைநிலை ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags : Kilpennathur ,
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில்...