×

ராசிபுரம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர்கள் தேர்வு

ராசிபுரம், ஜன.13: ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுவை திமுகவும், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுவை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக 4வது வார்டில் போட்டியிட்டு வென்ற திமுகவை சேர்ந்த கே.பி.ஜெகந்நாதன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மொத்தமுள்ள 9 உறுப்பினர்களில் திமுகவை சேர்ந்த பாலசந்திரன், அதிமுகவை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து போட்டி ஏதும் இல்லாததால், திமுகவை சேர்ந்த ஜெகந்நாதன் ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதே போல், 10 உறுப்பினர்களை கொண்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுவில், 6 பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள். போட்டி ஏதும் இல்லாத நிலையில், தங்கம்மாள் ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதே போல், வெண்ணந்தூர் ஒன்றியக்குழு துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலுக்கு, தலைவர் உட்பட உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இதனால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து, தேர்தல் அலுவலர் கருணாநிதி அறிவித்தார்.

Tags : Rasipuram ,Vennandur Panchayat Union Committee Chairman ,Vice Presidents ,
× RELATED தபால் பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு