×

தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பாதையில் ₹5 லட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்கு அமைப்பு: திமுக எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருப்போரூர், ஜன. 13: திருப்போரூர் பேரூராட்சி நெம்மேலி சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புக்கு செல்லும் பாதை சுமார் 2 கி.மீ தூரம் உள்ளது. இந்த பாதை இருளடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும்போது பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக குடியிருப்புவாசிகள் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹5 லட்சம் செலவில் 15 இடங்களில் தெரு மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி, புதிய தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அன்பழகன் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் புதிய மின் விளக்குகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருப்போரூர் நகர திமுக செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் பரசுராமன், மாவட்டத் துணை செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,MLA ,apartments ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்