×

வனத்துறையினர் சோலை மரக்கன்றுகளை தனியார் அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்

ஊட்டி, ஜன. 13: மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சோலை மரக்கன்றுகளை தனியார் அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலக வளாகங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடவு செய்யகூடிய மரக்கன்றுகள்  வனத்துறை சார்பில் தனியார் அமைப்புகளுக்கு சூழலுக்கு பயனற்ற சைப்ரஸ், குப்ரசஸ் போன்ற மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதில்சோலை மரக்கன்றுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் சூழலுக்கு பயனற்ற அந்நிய மரங்களை நடும் நிலை உள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் ெதரிவிக்கின்றனர்.

இதனிடையே சுற்றுசூழலுக்கு உகந்த சோலை மரக்கன்றுகளை தனியார் அமைப்புகள் நடவு செய்து வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் முகாம்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சோலை மரக்கன்றுகள் போதிய அளவு கிடைப்பதில்லை. வனத்துறை உற்பத்தி செய்யும் சோலை மர கன்றுகளை, வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதிகளில் நடவு செய்ய பயன்படுத்துகின்றனர். தனியார் அமைப்புகளுக்கு வழங்குவதில்லை. மரக்கன்று நடவு செய்ய ஆர்வம் காட்டும் தனி நபர் மற்றும் அமைப்புகளுக்கும் சோலை மரக்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தலைமை வன பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Forest Department ,soybean plants ,organizations ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...