×

மேலூரில் திமுக உள்ளிருப்பு போராட்டம்

மேலூர், ஜன.12: மேலூர் ஒன்றியத்தில் மொத்தம் 22 கவுன்சிலர்களில் திமுக 9 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வென்றது. காங்கிரஸ் 1, அமமுக 3, சுயேட்சை 1. வெற்றிக்கு 12 பேர் தேவை என்னும் நிலையில் திமுக.விற்கு அமமுக ஆதரவளிக்க முன் வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக 12 இடங்களை பெற்று 11வது வார்டு கவுன்சிலர் பொன்னுச்சாமி வெற்றி பெற்றதாகவும், திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்மாறன் 10 இடங்களை மட்டுமே பெற்றதாக அதிகாரிகள் கூறினர்.

தங்கள் வசம் 13 பேர் உள்ள நிலையில் எப்படி அதிமுக வெற்றி பெறும் என கூறி திமுக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் யூனியன் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தேர்தல் அதிகாரியான டிஆர்ஓ செல்வராஜ் அதிமுக வெற்றி பெற்றது குறித்து முறையான அறிவிப்பு வெளியில் தெரிவிக்காமல் வெளியேறினார். துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் மாலை 4 மணி வரை திமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tags : DMK ,Melur ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்