×

10 ஆண்டுகளுக்கு பின் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக

கொடைக்கானல், ஜன. 12: கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை 10 ஆண்டுகளுக்கு பின் திமுக கைப்பற்றியது. முதல் பெண் தலைவராக சுவேதாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு திமுக., அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் கூக்கால் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் பூங்கொடி, வில்பட்டி ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் ராசிகா, பெரியூர் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் சுவேதாராணி கணேசன், கே.சி.பட்டி ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் அபிராமி ஐயப்பன், மன்னவனூர் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, அடுக்கம் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் கார்த்திக் ஆகியோர் வெற்றிெபற்றனர்.

12 கவுன்சிலரில் 7 பேர் திமுகவினர் வெற்றி பெற்று கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. அதிமுக 2 இடத்தையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலாளர், பழனி தொகுதி எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமார் வாழ்த்து தெரிவித்தார். நேற்று காலை 11.30 மணிக்கு கொடைக்கானல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெரியூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரான சுவேதாராணி கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக முதல் முறையாக பெண் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி