×

வாடகைக்கு நெற்கதிர் அறுவடை இயந்திரம்

புதுக்கோட்டை, ஜன.12: விவசாயிகள் நெற்கதிர் அறுவடை இயந்திரம் வாடகைக்கு பெற புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் உள்ள வேளாண்மை பொறியியல்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நெற்கதிர் அறுவடை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.875-க்கு வீல் டைப் மற்றும் ரூ.1,415-க்கு ரப்பர் டிராக் என்ற குறைந்த வாடகையில் நெல் அறுவடை பணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த நெற்கதிர் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் புதுக்கோட்டை, அறந்தாங்கியில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்ணிற்கும் 04322-221816, புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் 9443264168, 9443405997 என்ற செல்போன் எண்ணிற்கும், அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் 9442178763, 9443456682 என்ற செல்போன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags :
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...