×

வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவராக கமலாஅன்பழகன் போட்டியின்றி தேர்வு

வேதாரண்யம், ஜன.12: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கமலாஅன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 25 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக 12, பிஜேபி 4, பாமக 2, திமுக 4, சுயேட்சை 3 இடங்களை கைப்பற்றியது. நேற்று ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் செல்வராசு தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த கமலா அன்பழகன் ஊராட்சி ஒன்றிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல் மாலையில் நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் கோடியக்காட்டைச் சேர்ந்த அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிபெற்ற தலைவர் கமலாஅன்பழகன் துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோருக்கு தமிழக ஜவுளி மற்றும் கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏராளமான கட்சி தொண்டர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டினர்.

Tags : KamalaAbhanagan ,Vedaranyam Union Committee Chairman ,
× RELATED மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா...