×

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி வாக்களித்ததால் தலைவர் பதவி கை நழுவியது

பொள்ளாச்சி,  ஜன.12: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து முடிந்த ஊரக  உள்ளாட்சி தேர்தலில் 13 ஒன்றிய உறுப்பினர்களில் தி.மு.க. 8 இடங்களையும்.  அ.தி.மு..க. 5 இடங்களையும் பிடித்தது. இதனால் தெற்கு ஒன்றியம் தி.மு.க.  வசமானதாக மகிழ்ச்சியடைந்தனர். இதுவரை தெற்கு ஒன்றியத்தை தக்க வைத்த  அதிமுக, இந்த முறை மிகவும் சரிவான பாதையில் சென்றது. இது அ.தி.மு.க.வினரிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தி.மு.க.வினர் மகிழ்ச்சியில்  இருந்தாலும், நேற்று நடந்த ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலில்  அ.தி.மு.க.வை சேர்ந்தவரே ஒன்றியக்குழு தலைவராக தேர்வானது, தி.மு.க.வினரிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 நேற்று நடந்த மறைமுக தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு 7 வாக்குகளும், தி.மு.க.வுக்கு 5 வாக்குகளே கிடைத்தது. தி.மு.க. ஒன்றிய உறுப்பினர் ஒருவர் தாமதமாக வந்ததாக அவரை  வாக்களிக்க,  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுமதி மறுத்தனர். மொத்தமுள்ள 13 ஒன்றியக்குழு  உறுப்பினர்களில் அ.தி.மு.க.வினர் 5 பேர் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், மறைமுக  தேர்தலில் கூடுதலாக 2 வாக்குகள் என மொத்தம் 7 வாக்குகள் பெற்று, மீண்டும்  ஒன்றியக்குழு தலைவர் பதவியை தக்க வைத்து கொண்டது.  காலம் தாமதமாக  வந்த தி.மு.க. ஒன்றியக்குழு ஒரு உறுப்பினரை தவிர, தி.மு.க.வை சேர்ந்த மற்ற 2  ஒன்றிய உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்தது, தி.மு.க. தொண்டர்களிடையே  மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 12  ஒன்றியங்களில் 11 ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணியே உறுப்பினர் எண்ணிக்கையில் முன்னிலையில் வந்தது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. அதிக இடங்களை  பிடித்ததால், தெற்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி  தி.மு.க.வினருக்கே என்ற  நிலையிருந்தும், இருந்த ஒன்றே ஒன்னும் கை நழுவி போனதாக தி.மு.க. தொண்டர்கள்  ஆதங்கப்படுகின்றனர்.

Tags : DMK ,councilors ,Pollachi Southern Union The ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி