×

பேரட்டி ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

குன்னூர், ஜன.12:ஊராட்சி ஒன்றிய துணைதலைவர்க்கான மறைமுகமான வாக்கெடுப்பு அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட துணை தலைவர் தேர்தலில் இழுபறி ஏற்பட்டது.  ஊராட்சி தலைவருடன் சேர்த்து 10 உறுப்பினர்கள் உள்ளனர்.  பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட 9 வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்வில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்த அதிமுக பிரமுகர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தினுள் சென்று உறுப்பினர்களுடன் பேரம் பேசியாதாக கூறப்படுகிறது. அங்கு வந்த திமுக பிரமுகர்களான வினோத், ஜான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் வெலிங்டன் காவல்துறையினர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து இரு கட்சியினரையும் வெளியேற்றினர். இதை தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் 6 ஓட்டுகளும் அதிமுக சார்பில் 4 ஓட்டுகளும் பெற்று திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் வார்டு எண் 5ல் வெற்றி பெற்ற சுகுணா துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : DMK ,
× RELATED போச்சம்பள்ளியில் திமுக உட்கட்சி தேர்தல் விருப்ப மனு