×

சேரங்கோடு ஊராட்சியில் குலுக்கல் முறையில் துணை தலைவர் தேர்வு

பந்தலூர், ஜன. 12: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் துணை தலைவர் தேர்தலில் சம எண்ணிக்கையில் இருவர் வாக்குகள் பெற்றதால்  குலுக்கல் முறையில் துணை தலைவர் தேர்வு நடைபெற்றது. பந்தலூர் அருகே  சேரங்கோடு ஊராட்சியில் நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு லில்லி எலியாஸ் என்பவர் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று துணை தலைவர் தேர்தல் நடந்தது. சேரங்கோடு ஊராட்சி எருமாடு 2ம் வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரபோஸ், 5 ம் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துணை தலைவருக்காக போட்டியிட  வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 15 உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உட்பட 16 உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தனர். அதில் இருவரும் 8+8. வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்ததால் தேர்தல் அலுவலர் பொன்னரசு குலுக்கள் முறையில் துணை தலைவராக சுயேச்சை வேட்பாளர் சந்திரபோஸை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆதரவாளர்களுடன் சேரம்பாடி பஜாரில் பட்டாசுகள் வெடித்து ஊர்வலம் நடத்தினர்.
 அதேபோல், நெலாக்கோட்டை ஊராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். 1ம் வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வட்டார தலைவர் அசரப்,  6ம் வார்டில் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றிப்பெற்ற நவ்பல்ஹாரிஷ் என்பவரும் துணை தலைவருக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அசரப் 7 வாக்குகளும்,  நவ்பல்ஹாரிஷ் 9 வாக்குகள் பெற்று நெலாக்கோட்டை ஊராட்சி துணை தலைவராக வெற்றிப்பெற்றார். சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் தலைமையில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Vice Chairperson ,Panchayat ,Serangood ,
× RELATED வீட்டில் துப்பாக்கி பதுக்கி விற்பனை...