×

அன்னூர் ஒன்றிய துணை தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

அன்னூர், ஜன.12:  அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முருகேசன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.
 இதில் திமுகவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி 11 வாக்குகள் பெற்றார், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட  பாஜ கட்சியை சேர்ந்த ஜெயபால் 4 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்திக்கு, அன்னூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆனந்தன் முன்னிலையில், தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னூர் நடராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
 இதில், ஒன்றிய துணை செயலாளர் மோகன், பச்சாபாளையம் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், பசூர் ஊராட்சி தலைவர் வித்யா சுகுமார், தொழிலதிபர் பழனிச்சாமி, மதிமுகவைச் சேர்ந்த குமார், திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், பழனிச்சாமி, சுகுமார், முரளி, கதிர்வேல், சுப்ரமணியம், மணி உட்பட ஏராளமான திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Annur Union ,Vice President election ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி