×

விளாத்திகுளம், புதூர் ஒன்றிய தலைவர்கள் துணைத்தலைவர்கள் தேர்வு

விளாத்திகுளம், ஜன.12: விளாத்திகுளத்தில் மொத்தம் 16 வார்டுகளில் அதிமுக கூட்டணி-10, திமுக கூட்டணி-5, சுயேச்சை-1 வெற்றி பெற்றனர். நேற்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. .அதிமுக சார்பில் 8வதுவார்டு உறுப்பினர் முனியசக்தியும், திமுக சார்பில் 13வது வார்டு உறுப்பினர் சுமதி போட்டியிட்டனர். இதில் முனியசக்தி ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதூர் ஒன்றியத்தில் மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக-10, திமுக கூட்டணி-2, சுயேட்சை-1 வெற்றி பெற்றனர். ஒன்றிய தலைவராக 12வதுவார்டு அதிமுக உறுப்பினர் சுசிலாதனஞ்செயன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.விளாத்திகுளம் ஒன்றிய துணைத்தலைவராக பிஜேபி சுப்புலட்சுமியும், புதூர் ஒன்றிய துணைத்தலைவராக திருச்செல்வியும் தேர்வுசெய்யப்பட்டனர்.இதனையடுத்து ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட முனியசக்தி, சுசிலாதனஞ்ஜெயன் ஆகியோர் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் விளாத்திகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்  பங்கேற்றனர். அமைச்சர் கடம்பூர்ராஜுவிடம் வாழ்த்துக்கள் பெறச்சென்றனர்.

Tags : Vadathikulam ,leaders ,vice presidents ,Budur Union ,
× RELATED தமிழக காங்கிரஸ் தலைவரின் அலுவல் பொறுப்பாளர்கள் நியமனம்